கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

58954
58954

படபொல- நிந்தான பகுதியில் நேற்று (3) இரவு சிகை அலங்கார நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக வருகைதந்த இளைஞனை, மது போதையில் இருந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இளைஞனை, படபொல வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது உயிரிழந்துள்ளார்.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்கான மேலதில விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற னர் .