நட்டாங்கண்டல் அ. த. க. பாடசாலை நூலக வசதியை மேம்படுத்த ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி

received 1109527806543098
received 1109527806543098

தேசிய லொத்தர் சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ளும் முகமாக பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்த புத்தகங்கள் கொள்வனவுக்காக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது

received 279427880779658 1
received 279427880779658 1

நட்டாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதல்வர் சின்னப்பு சிறீபாலராமகிருஸ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர் டி.டி.ஜயசிறீ யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டு நிதியுதவியினை  வழங்கி வைத்தனர்

received 275037151387035
received 615967786181517