கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது!

WhatsApp Image 2022 01 22 at 5.31.18 PM
WhatsApp Image 2022 01 22 at 5.31.18 PM

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கஜமுத்தினை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் ஒருவரை சிறப்பு காவற்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.

22.01.2022 அன்று காலை முல்லைத்தீவு நகர்பகுதியில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்ஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது 

இவரை முல்லைத்தீவு காவற்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு காவற்துறையினர் குறித்த நபரை நேற்றைய தினம் (23)  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்திய போது குறித்த நபரை இரண்டாம் மாதம் முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்