பாண்டியன்குளம் விபத்தில் ஒருவர் பலி -இன்னொருவர் காயம்

IMG 20220127 WA0006
IMG 20220127 WA0006

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் 

IMG 20220127 WA0006

வெகோ ரக மோட்டார் வண்டி  நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றி சென்ற  உழவு இயந்திரத்தில்  மோதி குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது 

குறித்த விபத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த  ரவீந்திர நிக்கசீல என்பவர்  சம்பவ இடத்திலேயே பலியானதுடன் செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ் என்பவர் படுகாயம்அடைந்தவராவார்

IMG 20220127 WA0011

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்யசாலைக்கு      (மாஞ்சோலை)    எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாண்டியன்குளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன