அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

1643277541 asath 2
1643277541 asath 2

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னால் ஆளுநருமான அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து அஸாத் சாலி அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளான மாட்டின் கெலி, ரூபி வூட் சேட், அரசியல் பொறுப்பாளர் நஸ்ரின் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது