வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான அளவீடு வேலைத்திட்டம் பெப்ரவரி முதல் ஆரம்பம்

Auto METER
Auto METER

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான அளவீடு வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அளவீடுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு மாத்திரமே வாடகை வண்டிகளில் மீற்றர்களை விற்பனை செய்வதற்கும் பொருத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.என்.அக்குரந்திலக்க தெரிவித்துள்ளார்.

உற்பத்தி அல்லது விற்பனைக்கு முன் வணிக பயன்பாட்டிற்கு ஏற்றதா என பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளுக்கு முன் அனுமதி பெறப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸி மீற்றர்களில் அடையாள ஸ்டிக்கரை ஒட்டவும் உத்தேசித்துள்ளதாக அளவீட்டு அலகுகள் தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.