ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே தெரிவு!

6e c7
6e c7

அண்மையில் காலமான இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமணம் செய்துகொண்ட இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு சபையின் அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது