கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1594700738depositphotos 13240275 stock photo build hospital
1594700738depositphotos 13240275 stock photo build hospital

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக, வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களுள் அதிகமானோர், கொவிட் நோயுடன் வேறு நோய் நிலைமைகளையும் கொண்டுள்ளதாக கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொரோனா தொற்றுறுதியாகி குணமடைந்த நபர் ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.