செயலூக்கி செலுத்தியோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை கடந்தது

163158 corona vaccine reuters1
163158 corona vaccine reuters1

நாட்டில் நேற்றைய தினம் 21,414 பேருக்கு பைஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய பைஸர் செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5,200,047ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 2,112 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,063 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

244 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 288 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.