மற்றுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் பாதிப்பு

images 2
images 2

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று (31) பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேற்படி மின்முனையத்திற்கு தேவையான 500 மெற்றிக் தொன் எரிபொருள் வழங்கப்படும் என சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் குறித்த எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் லக்விஜய முனையம் மீண்டும் செயற்பட ஆரம்பித்தமையை அடுத்து தேசிய மின்கட்டமைப்பில் 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.