“2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள்” தேசிய வேலை திட்டம் ஆரம்பம்

89d9141d 9f6f 474d ac4f 8b78abb30b57
89d9141d 9f6f 474d ac4f 8b78abb30b57

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு 3மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் “2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பணிகள்” தேசிய வேலை திட்டம் 03.02.2022 நேற்றைய தினம் வவுனியா கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் தலைவரும் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனருமான திரு சுதாகரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

5d34d896 d367 4c4e a5a4 74ca307bb0b9

பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவில் பாலமோட்டை பொதுநோக்கு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு உரித்து பத்திரம் வழங்கப்பட்டது.

32efb80f 8089 4a9c 8cf8 aab1755d47c4

இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வன்னி மாவட்டதிற்கான விசேட பிரதிநிதி நிரோஷன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அன்சால மற்றும் கிராம மக்களும்கலந்து கொண்டனர்

9c8f4109 3840 4274 8c77 ed0dabcc9e1a
c84aecb9 eb06 495a 8249 462eae41867c
4618c49a 671f 47a5 befb 8ff34837557e