நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது – சஜித்

Sajith.Premadasa.7 1
Sajith.Premadasa.7 1

நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி – தர்மகீர்த்திராம விகாரையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வறுமையின்றி வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாட்டின் தன்னிறைவு மற்றும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டொலருக்காக ஏனைய நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தோற்கடித்து ஒரு தலைமையின் கீழ் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.