தங்கம் வென்ற யுவதிக்கு பயிற்சி உபகரணங்களை கையளித்த கொழும்பு-07 மகளிர் கல்லூரி பழைய மாணவர்கள்

inthu.3
inthu.3

கடந்த  மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பாகிஸ்தான் இரண்டாவது சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவி  மாவட்டத்திற்கு மாத்திரம் அல்லாமல் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தார்

inthu 6

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்ற குறித்த யுவதி  அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தனது பயிற்சியின் மூலம் இந்த வெற்றியை பெற்றதாக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய நிலையில் இந்த யுவதியின் குறித்த துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு குறித்த யுவதி  பயிற்சி பெறக்கூடிய வகையில் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கான ஒரு தொகுதியை கொழும்பு-07  மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் வழங்கி வைத்துள்ளனர்

inthu

சி எம் எஸ் மகளிர் கல்லூரி கொழும்பு -07 பழைய மாணவிகள்  சார்பாக அனிதா, அயோமி ,தீப்திகா, திலானி, நிர்மலா, ரமணி, ரோஷன், சமந்தா, ஷானிகா, சுரேஷ் மற்றும் வருணி  ஆகியோர் இணைந்து  சுமார் 80 ஆயிரம் பெறுமதியான குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கான குறித்த உபகரண தொகுதியை  வழங்கி வைத்துள்ளனர்

ஐக்கிய  மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட  பிரதான அமைப்பாளர் லக்ஸயன் முத்துக்குமாரசாமி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் உள்ளிட்டவர்கள் குறித்த உபகரண தொகுதியை யுவதியின் வீட்டில் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்