மின் தேவைக்கமைய மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்!

Chairman Janaka Ratnayake
Chairman Janaka Ratnayake

மின்சார தேவைக்கு அமைய மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவுக்கேற்ப பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கமைய தரவுகள் சேகரிக்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

மின்னுற்பத்தி தேவையான மூலப் பொருட்களின் அளவு, மின்சாரத்திற்கான தேவை மற்றும் விநியோகம் என்பவற்றின் அளவுகள் கவனத்தில் கொள்ளப்படும்.

இதற்கமையவே மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். சுமார் 2, 750 மொவொட் மின்சார தேவை காணப்படுமாயின் மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.

தற்போது அந்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.