பெண்கள் வட்டத்திற்கான அலுவலகம் திறந்து வைப்பு

IMG 9325
IMG 9325

“எழுச்சியின் கரங்கள்” பெண்கள் வட்டத்தின் அலுவலக திறப்புவிழாவும், இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வும் வவுனியா சிதம்பரநகர் பகுதியில் இன்று (06) மாலை இடம்பெற்றது.

IMG 9344

பெண்கள் வட்டத்தின் தலைவர் வி.லோகேஸ்வரி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன் கலந்து கொண்டார். 

IMG 9347

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பெண்கள் வடத்திற்கான புதிய கட்டிடத்தை உதவிப்பிரதேச செயலாளர் நாடாவெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.    அதனை தொடர்ந்து பட்டிமன்றம், கவிதா நிகழ்வு போன்ற கலை நிகழ்வுகளுடன் பரிசளிப்பும் இடம்பெற்றது.

IMG 9338

நிகழ்வில் தமிழ்மணி மேழிக்குமரன், தமிழருவி சிவகுமாரன், கிராமசேவையாளர் பா.ஜனகன், அட்சயம் அமைப்பின் செயலாளர் இ.சஜீந்திரா, உபதலைவர் இரா.இராஜேஸ்வரன், பொதுஅமைப்புக்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.