ஹெரோயின் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

kaithu
kaithu

காத்தான்குடியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை 5 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று (07 ) காலையில் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலையில் காவற்துறையினர் காத்தான்குடி மீன்பிடி இலாக வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த நபரை மடக்கிபிடித்து கைது செய்யததுடன் அவரிடமிருந்து 5 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்