மட்டக்களப்பில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

Capture
Capture

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று (3) காலை மோட்டார் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.