அதிசொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து! பலர் காயம்

1645850070 accident 002
1645850070 accident 002

திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பேருந்தொன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கொழும்பு பிரதான வீதியின் கலேவெலவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்