பால்மாவின் புதிய விலைகள் நாளை அறிவிப்பு

milk powder
milk powder

இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்புக்கு அமைவான, புதிய விலை, நாளைய தினம் அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இறக்குமதி பால்மா கிலோ ஒன்றின் விலை, 500 அல்லது 600 ரூபாவினால் அதிகரிக்கப்படக்கூடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.