2 வருடங்களின் பின்னர் இதொகாவின் புதிய தலைவர் தெரிவு இன்று!

800px Flag of Ceylon Workers Congress.svg
800px Flag of Ceylon Workers Congress.svg

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடவுள்ளது.

கொட்டக்கலையில் உள்ள சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று முற்பகல் தேசிய சபை கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.

அத்துடன், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து, கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இன்றைய தினம் தேசிய சபை கூடி, புதிய தலைவர் தெரிவு செய்யப்பட உள்ளார்.

தலைவர் பதவிக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தேசிய சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய தலைவர் நியமனம் இடம்பெறவுள்ளது