கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலால் இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதியாகும் கொள்கலன்கள்

1609705942 bus exports
1609705942 bus exports

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை, கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள நெரிசல் நிலை என்பனவற்றினால், தென்னிந்திய துறைமுகத்திற்கு, சர்வதேச கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி அதிகளவில் கிடைப்பதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள வல்லர்படம் சர்வதேச துறைமுகத்தின் கொள்கலன் மீள் ஏற்றுமதி முனையத்திற்கு இவ்வாறு அதிகளவான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த முனையத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மீள் ஏற்றுமதி கொள்கலன்களின் எண்ணிக்கை 13, 609 வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 8,394 ஆக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி துறைமுகத்தின் கொள்கலன் கையாள்கை, கடந்த நிதி ஆண்டில் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.