3,500 மெற்றிக் தொன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு

download 5
download 5

அடுத்த சில வாரங்களில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்ச எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்து தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்திக் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெரும்பாலான எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், நகர்ப்புற விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

அத்துடன் 3,500 மெற்றிக் தொன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் மேலும் பல வழங்குநர்களை தெரிவு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது