சகல எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ceypetco bowser tanker 750x375 1 300x150 1
ceypetco bowser tanker 750x375 1 300x150 1

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்குமாறு சகல எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்தமையை அடுத்து எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள நீண்ட வரிசையை எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்க முடியும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 3 நாட்களில் நிலைமையை வழமைக்குக் கொண்டு வர முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் சில தினங்களில் விலை திருத்தம் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.