ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டமை ‘சடலத்தை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பானது’

download 8
download 8

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) நியமிக்கப்பட்டார். அதன்படி இன்று அவர் பிரதமராக பதவியேற்றார்.

எனினும், இந்த நியமனம் காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக வண. ஓமல்பே சோபித தேரர் மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் ஊடக சந்திப்பொன்றினூடாக கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த நியமனம் பொருத்தமற்றது என காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டப் பிரதேசத்தின் பிரதிநிதிகளும் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தமை ‘சடலத்தை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பானது’ என சோஷலிச இளைஞர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், கோட்டாபாய ராஜபக்ஷழவ வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திலிருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்