ஜனாதிபதி – அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நா.உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

mahintha
mahintha

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இதேநேரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.