காவல்துறை பொது மக்களிடம் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை!

images 5 1
images 5 1

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து, நாடளாவிய ரீதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, 1997 மற்றும் 119 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு இது குறித்த தகவல்களை பொது மக்கள் தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.