அமைச்சரவையில் இணைவு குறித்த விக்கியின் கருத்துக்கு கூட்டணியின் பங்காளி கட்சி எதிர்ப்பு

vikki
vikki

நிபந்தனைகளுடன், அமைச்சரவையில் இணைந்துகொள்வது குறித்து பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை, நிராகரிப்பதாக கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை தாங்கள் முற்று முழுதாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்