லிட்ரோ நிறுவனத்திற்கான கோப் குழுவின் பரிந்துரை

gas cylinder 720x375 1
gas cylinder 720x375 1

நாளாந்தம் 60சதவீத எரிவாயு கொள்கலன்களை மக்கள் அதிகமுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு விநியோகிக்குமாறு கோப் குழு என்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு லிட்ரோ நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 120 மில்லியன் வாயுவினை இறக்குமதி செய்வதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 3 மாதத்திற்கான வாயுவினை தமது நிறுவனத்தினால் வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேபோன்று உலக வங்கியிடம் இருந்து மேலும் 80 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக சனத்தொகையினை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு நாளாந்தம் 60 சதவீதமான எரிவாயு கொள்கலன் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் தற்போது 3.5 மில்லியன் எரிவாயு கொள்கலன்கள் பற்றாக்குறையாக உள்ளது.

இரண்டு கப்பல்களில் இருந்து பெறப்பட்டதற்கு அமைய நாளாந்தம் 80,000 எரிவாயு கொள்கலன்கள் 42 முன்னணி முகவர்கள் மற்றும் உப முகவர்களின் ஊடாக நாடளாவிய ரீதியாக விநியோகிக்கப்படுகின்றது.

காலநிலை சீர்கேடு காரணமாக முத்துராஜவெல கடற்பிராந்தியத்தில் இறக்குமதி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கப்பலை கொழும்பிற்கு கொண்டு வந்து இறக்குவதற்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.