நன்கொடையாக வழங்கப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடையும்

202201030751031720 Tamil News Rs 6750 crore loan assistance Sri Lanka India provides this SECVPF
202201030751031720 Tamil News Rs 6750 crore loan assistance Sri Lanka India provides this SECVPF

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளன.

9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் அடங்கிய உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

நாட்டை வந்தடையவுள்ள இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கவுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்த பொருள் தொகுதி அனுப்பி வைக்கப்படுகின்றது.

இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும்.

அத்துடன் பல்வேறு பிரிவுகளை சார்ந்த பயனாளிகளுக்கும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.