சிறப்பாக இடம்பெற்ற பனிக்கன்குளம் ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்!

FB IMG 1654333863641
FB IMG 1654333863641

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பனிக்கன்குளம் பாடசாலை வீதி ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று (03) மிக சிறப்பாக இடம்பெற்றது

FB IMG 1654333902935

01.06.2022 அன்று ஆலயத்தில் கிரிகைகள் ஆரம்பமாகி 02.06.2022 அன்று எண்ணெய்க்காப்பு இடம்பெற்று 03.06.2022 நேற்றைய தினம் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்   மிககவும் சிறப்பாக இடம்பெற்றது

FB IMG 1654333908378

சிவகுகக்குருக்கள்,சிவகுகநாதக்குருக்கள்,சிவகுகேந்திரக்குருக்கள்,சோமகிரிதரக்குருக்கள்,பரமேஸ்வரக்குருக்கள் ஆகிய சிவாச்சாரியர்களினால் இந்த கிரிகைகள் மஹா கும்பாபிஷேகம் என்பன சிறப்பாக இடம்பெற்று அதனைத்தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்

FB IMG 1654333887497

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிசேகம் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 14.06.2022 அன்று சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

FB IMG 1654333914316