எரிவாயுவுக்கு பதிலாக விறகு பயன்படுத்துவதால் ஆயுட்காலம் அதிகரிக்கிறது – சரத் வீரசேகர

sarath Weerasekara 300x200 1
sarath Weerasekara 300x200 1

நவீன மற்றும் சுத்தமான வலுசக்தியை பயன்படுத்தும் வளர்முக நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தை காட்டிலும் விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (7) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள் ஆகும்.

எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும்.

இதனூடாக, விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர சீரழிவுக்காக அல்லவென இதனூடாக புலப்படுகிறது என்றார்.