வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ பரவல்

IMG 20220609 121436 2
IMG 20220609 121436 2

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (09) காலை 11.30 மணியளவில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

IMG 20220609 121315

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியாலய போராட்டத்தினையடுத்து தீயினை முற்றாக அணைத்திருந்தனர்.

IMG 20220609 122516

இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.