அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் சுகவீனத்தால் மரணம்!

IMG 2379
IMG 2379

வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராயன் சுகவீனம் காரணமாக இன்று (06) மரணமடைந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் மரணமடைந்தார்.

அவர் கடந்த இரு வருடங்களாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.