மாணவியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

kaithu
kaithu

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவி ஒருவரை பாடசாலையில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக ஹுங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனது மகளை ஆசிரியர் தொடர்ந்தும் தாக்கியதாக குறித்த தாய் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிறுமி தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் சிறுமியின் வகுப்பாசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.