வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

received 558962449392382
received 558962449392382

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களிடம் குறித்த நாணயத்தாள்கள் இனந்தெரியாதோரால் பொருட்களை பெறும்போது வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.