வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் இடம்பெற்றதுடன், மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணி இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் அதன் அருகே உள்ள நிலத்தில் நினைவு தின ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் துயிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

போரால் மரணித்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட நூற்றுக்கணக்கானோர் தீபம் ஏற்றி அழுது புலம்பி கண்ணீர் மல்லக உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
பிரதான சுடர் இரண்டு மாவீரர்களின் தாய் ஒருவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டிருந்தன. கலந்து கொண்ட அனைவருக்கும் மாவீரர் நினைவாக ஒவ்வொரு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.