வவுனியா நகரசபையால் இருவேறு கட்டட தொகுதிகள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் கீழ் பூங்காவினுள் பொது நிகழ்வுகளுக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய திறந்த மேடை மற்றும் வவுனியா நகரிலே இறைச்சிக்கடைக்கான 06 கடைகளினை உள்ளடக்கிய கட்டட தொகுதி ஆகியவற்றினை வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் சுஜன், மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த இரு கட்டட தொகுதிகளும் 16 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.