இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

Jey shankar new
Jey shankar new

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கையும் இந்தியாவும் முக்கிய ஈடுபாடுகளை மேற்கொண்டதுடன் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் வரி உட்பட நான்கு அம்சப் பொதியை உருவாக்கியுள்ளன.

இந்தியா ஏற்கனவே 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கடன்கள், கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்தநிலையில் புதுவருடத்தில் இந்தியாவிலிருந்து வரும் முதல் உயர்மட்ட வருகையாக ஜெய்சங்கரின் வருகை அமைந்துள்ளது.

இறுதியாக அவர் கடந்த 2022 மார்ச்சில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.