மின் கட்டண உயர்வு – இறுதி தீர்மானம் இன்று?

22 62f4acba658f1
22 62f4acba658f1

மின் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு இன்று (09) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை, மேலதிக ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக இன்று (9) வரை ஒத்திவைக்கப்பட்டது.