தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 73 பேர் சித்தி!

2016 07 19
2016 07 19

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 73 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர். 

 
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 73 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 96 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 21 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபேற்றை பெற்றுள்ளனர்.  


குறித்த பாடசாலையில் புலமைப்பரீட்சைக்கு இம்முறை 194 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் அவற்றில் 190 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர். சித்தி விகிதம் 98 விகிதமாக காணப்படுகின்றது