பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கி…

1675159200 jaffna 2
1675159200 jaffna 2

இலங்கையின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால், துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து தெய்வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பமானது.

எதிர்வரும் 4 நாட்களுக்கு குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனை பகுதியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.