பதவி விலகியதாக கூறப்படும் சார்ள்ஸ், வர்த்தமானியில் கையெழுத்து!

psm charles
psm charles

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பதவி விலகவில்லை என்று தெரியவந்துள்ளது.

அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின.

அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்றில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.

இது தொடர்பில் ​​தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம் செய்திப்பிரிவு ஒன்று வினவியபோது, வாக்காளர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.