பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

1625372487 school 02 1
1625372487 school 02 1

க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

நாளை ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடரும் என்றும், 2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணை மார்ச் 27 ஆம் திகதி முதல் தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முதலாம் தரத்துக்கு மாணவர்களுக்கான புதிய பாடசாலை தவணை, முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி நிறைவடைந்ததோடு, உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு பணிகளுக்கான திகதி நிர்ணயம் செய்யப்பட்டவுடன், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின்போது எந்தெந்த பாடசாலைகள் திறக்கப்படும் அல்லது மூடப்படும் என்பதை பரீட்சைத் திணைக்களம் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.