சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வருள்ள குடும்பம் இன்று (7) காலை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா காவற்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.