மகாநாயக்க தேரர்களுக்கு 13 ஆவது திருத்தம் தொடர்பில் புரிந்துணர்வு இல்லை

vikki
vikki

தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற நிலையில், மகாநாயக்க தேரர்கள் செயற்படுவதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து, மகாநாயக்க தேரர்களுக்கு எந்தவித புரிந்துணர்வும் இருப்பதாக தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்கு, மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இதுவரையில் குறித்த கோரிக்கைக்கு மகாநாயக்க தேரர்களிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என, செய்திச் சேவை ஒன்று வினவியபோது நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.