மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள உறுதிப்பாடு

1649329263 nandalal 02
1649329263 nandalal 02

எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை தொடர்பான மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, பொதுமக்களின் வங்கி வைப்புத் தொகை மற்றும் வங்கி முறையின் ஸ்திரத்தன்மை தொடர்பாக பல ஊகங்கள் மற்றும் அனுமானங்கள் பரப்பப்படுவதைக் காணமுடிகிறது. மத்திய வங்கியின் தரப்பில் எங்களின் முதன்மை நோக்கம் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகும். எந்த வகையான கடன் மேம்படுத்துதலின் போதும் வங்கி அமைப்பு மற்றும் பொது வைப்புத் தொகையின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.