ராஜிதவிற்கு எதிராக சட்ட மா அதிபர் பிணை மீளாய்வு மனு தாக்கல்

rajitha
rajitha

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று நேற்று (08) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச தரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கடந்த டிசம்பர் 24ம் திகதி பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 27ம் திகதி கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்தே அவருக்கு டிசம்பர் 30ம் திகதி வரை விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 30ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையும் வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிராகவே பிணை மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.