தவறாக புரிந்து கொண்டனர், தர்ஷானந் மன்னிப்பு கோரல்!

tharshananth
tharshananth

நான் சாதி பற்றி பேசவில்லை, அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு யாராவது மனம் வருந்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரான ப.தர்ஷானந் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பிட்ட நபரின் அறிவு மட்டத்தைக் குறிக்கவே குளத்தில் உள்ள நீரின் அளவுக்கே தாமரை என்றும், அவரின் அறிவுமட்டத்துக்கே அவரின் பேச்சு என்பதைக் குறிக்கவே ‘மூதுரை’ யின் சில வரிகளை முகநூலில் பதிவிட்டிருந்தேன்.

ஆனால் அதனை தவறாக பொருள் கொண்டு சுய இன்பம் அனுபவித்து, தீய வதந்தி பரப்பும் விசமிகள் இதனைக் கொண்டு அரசியல் நடத்த முற்படுகின்றனர்.

என்னுடன் பழகுவோருக்கும், என்னை அறிந்தோருக்கும் என்னைப் பற்றியும், என் பழக்கவழக்கம் பற்றியும் நன்கு தெரியும்.

‘சாதி’ என்பது எனக்கு எப்பொழுதும் அப்பாற்பட்ட ஒன்று. நான் எப்போதுமே கைக்கொள்பவன் அல்ல.

ஆனால் அதனை தவறாகப் புரிந்து கொண்டு யாராவது மனம் வருந்தினால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.