சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

sl government 1
sl government 1

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதே நாட்களில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப்பும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.