வட மாகணத்தில் முதல் முதலில் நாளை இடம்பெறவுள்ள சாதனை நிகழ்வு

IMG 5595
IMG 5595

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கல்வி கலாச்சார சமூக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் நடை பவனியானது நாளை(11) காலை 8 மணிக்கு புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி எழுத்துர் ஊடாக மன்னார் பாலம் வழியாக இடம்பெற உள்ளது

குறித்து நடை பவனியில் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என சுமார் 2500 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்

குறித்த நடை பவனியில் வடமாகாணத்தில் முதல் முறையாக புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவ ரீதியாக ஹெலிகொப்டர் மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டவுள்ளது.

அதன் பின்னர் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெறும் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் குறித்த நடைபவணியானது நிறைவடையவுள்ளது

எனவே குறித்த நடைபவனியில் அனைத்து பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகளை கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது